ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்
- Home /
- ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்
"ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்து, அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை George V முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கின்றோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் (ஒவ்வொருவனும்) செய்ய வேண்டிய கடமை". இப்படிக்கு ஆர். வாஞ்சி ஐயர் செங்கோட்டையின் சேரிப்பகுதியில் வசித்த ஒரு பெண் பிரசவ வலியால் துடித்தபோது, அவளைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்ட திருமதி ஆஷ் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்வதற்காக குறுக்குவழியாக அக்ரகாரம் வழியே வண்டியை ஓட்டச் செய்தார். சேரிப்பெண் அக்ரகாரம் வழியே அழைத்துச் செல்லப்பட்டதால், அவ்விடத்தின் புனிதம் கெட்டுப்போய் விட்டது என்று கருதிய செங்கோட்டைப் பிராமணர்கள் ஆஷிடம் முறையிட்டனர். ஆஷ், துணைவியார் மிகச்சரியாகவே நடந்துகொண்டிருப்பதாக கூறி அவர்களை திருப்பி அனுப்பினார். இச்சம்பவத்தோடு நாம் வாஞ்சிநாதனின் கடித வாசகங்களைப் பொருத்திப் பார்த்தால் ஆஷைத் தீர்த்துக் கட்டியது தேச விடுதலை உணர்வுதான் என்பது வெறும் புனைவாகவே தெரியும். இந்த மண்ணில் அடிவேர் வரை புரையோடியிருக்கிற வர்ணாசிரம ஸனாதனமே அங்கு துப்பாக்கியாய் இயங்கியதை நாம் புரிந்து கொள்ள முடியும்.