அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்

  • Home /
  • அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்

அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்

இந்த மக்களின் மொத்த எண்ணிக்கையை கவனிக்க வேண்டும். ஆதிப் பழங்குடியினரின் மக்கள் தொகை 2 கோடியே 50 லட்சம். குற்றத் தொழில் பழங்குடியினரின் எண்ணிக்கை 45 லட்சம். தீண்டத்தகாதவர்கள் அய்ந்து கோடி பேர் உள்ளனர். ஆக மொத்தம் ஏழு கோடியே 95 லட்சம் பேர் உள்ளனர். இந்து மதத்தின் பிடியில் சிக்குண்ட இம்மக்கள் சமூக, பொருளாதார, உளவியல் ரீதியாக தாழ்த்தப்பட்டு ஒழுக்கமற்றவர்களாக எவ்வாறு தொடர்ந்து இருந்திருக்க முடியும் என்று கேட்டுப் பாருங்கள். தங்களுடைய நாகரிகமே உலகின் தொன்மையான நாகரிகம் என்றும் வேறெந்த மதங்களை விடவும் தங்கள் மதமே உயர்வானது என்றும் இந்துக்கள் கூறுகின்றனர். இது உண்மையெனில், இம்மக்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமும் கொடுத்து இவர்களை ஏன் முன்னேற்றவில்லை? கோடானு கோடி மக்களை குற்றவாளிகளாகவும் அவல நிலையிலும் வாழ வைத்துவிட்டு, வெறுமனே கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது எப்படி? இதற்கெல்லாம் என்ன பதிலை (இந்து மதம்) வைத்திருக்கிறது? இதற்கெல்லாம் ஒரே பதில், இந்து மதம் தீட்டுப்பட்டுவிடும் என்ற அச்சத்தால் ஒடுங்கிக் கிடந்ததுதான். கிடந்ததுதான். தன்னை தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஆற்றலோ அதிகாரமோ அந்த மதத்திற்கு இல்லை; தொண்டு செய்ய வேண்டுமென்ற உந்துதலும் அதற்கில்லை. எனவே தான் (இந்து மதம்) அதன் இயல்பிலேயே அது மனிதத்தன்மை அற்றதாகவும் அறமற்றதாகவும் உள்ளது. இதனை மதம் என்று சொல்வதே பொருத்தமற்றதாகும். மதம் என்பது எதற்காக இருக்கிறதோ அதற்கு நேரெதிரானது இதன் தத்துவம்.

Book Description